தேவசகாயம் மரண விசாரணை அறிக்கை ஏஜி அலுவகத்தில் சமர்ப்பிப்பு

Malaysia, News

 226 total views,  1 views today

ஈப்போ-

ஆடவர் ஒருவரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கை மீண்டும் தேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் முடிவு கிடைக்கப்பெற்றவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் தெரிவித்தார்.


தாக்குதலுக்கு ஆளான பாதுகாவலர் தற்போது உயிரிழந்திருப்பதால் வழக்கு விசாரணை முழுமை பெறச் செய்யுமாறு குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவரின் வழக்கறிஞர் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
அதனை தொடர்ந்து விசாரணை அறிக்கை முழுமை பெறச் செய்யப்பட்டு தேசிய சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் இன்னமும் விசாரணையில் இருப்பதால் பொதுமக்கள் யாரும் ஆருடங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், நாட்டின் நீதி- சட்டதுறை மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Leave a Reply