தேவசகாயம் வழக்கில் அரசியல் ஆதாயமா? உமாபரன் சாடல்

Malaysia, News

 481 total views,  1 views today

சுங்கை சிப்புட்-

பாதுகாவலர் தேவசகாயம் ஆடவர் ஒருவரால் தாக்கப்பட்டு மரணடைந்த சம்பவத்தில் நீதி நிலைநாட்ட சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு சட்ட உதவிகளை வழங்க ஜசெக வழக்கறிஞர்கள் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் அவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அரசியல் ஆதாயம் தேடுக்கூடாது என்று சுங்கை சிப்புட் சமூக ஆர்வலர் உமாபரன் வலியுறுத்தினார்.

இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேவசகாயம் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை கொலை குற்றச்சாட்டு மாற்றப்பட்டது குறித்து வழக்கறிஞர்கள் எம்.குலசேகரன், அ.சிவநேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.


அப்போது இந்த வழக்கு விசாரணையில் ஜசெக வழக்கறிஞர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர் என்று வழக்கறிஞர் சிவநேசன் அழுத்தமாக கூறியிருப்பது அவர்களில் அரசியல் உள்நோக்கத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.

அரசியல் ரீதியில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள தேவசகாயத்தின் மரணத்தை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதாக முன்வந்து அதில் அரசியல் லாபம் தேட வேண்டாம் என்று உமாபரன் குறிப்பிட்டார்.

Leave a Reply