தேவசகாயம் வழக்கை கையாள்வது ஜசெக வழக்கறிஞர்கள் மட்டுமே

Malaysia, News

 261 total views,  1 views today

ஈப்போ –

பாதுகாவலர் தேவசகாயம் தாக்கப்பட்டு மரணமுற்ற சம்பவம் தொடர்பில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் ஜசெக வழக்கறிஞர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர் என்று வழக்கறிஞர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
ஈப்போ உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தேவசகாயம் வழக்கு விசாரணை தொடர்பில் அவரது குடும்பத்தினரின் வழக்கறிஞர்களாக ஜசெக வழக்கறிஞர்கள் மட்டுமே பிரதிநிதிக்கின்றனர் என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் கடமையில் இருந்தபோது தேவசகாயத்தை ஆடவர் ஒருவர் தாக்கியதில் கடுமையாக காயமடைந்ததில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் கடந்த மாதம் தேவசகாயம் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply