தைப்பிங்கில் வீரன் வெற்றி

Uncategorized

 188 total views,  3 views today

தைப்பிங்-

பேரா மாநிலத்தில் பரபரப்பாக நடைபெற்ற மஇகா தொகுதித் தேர்தலில் தைப்பிங் தொகுதியில் எம்.வீரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

129 வாக்குகளை பெற்று வீரன் முன்னிலை வகித்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிய்ய முனியாண்டி 46 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

மேலும் துணைத் தலைவராக 123 வாக்குகளை பெற்று வீ.சங்கரன் தேர்வான நிலையில்  அவரை எதிர்த்து போட்டியிட்ட வரதன் 51 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

தொகுதித் தேர்தல் முடிந்து  விட்டது. இனி தனித்தனி அணி என்பது கிடையாது. மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ  எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அணி, பேரா மாநிலத்தில் டத்தோ வீ.இளங்கோ அணி, தைப்பிங்கில் வீரன் அணி என்பதே  பின்பற்றப்படும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்கள் நலனுக்காக சேவையாற்றுவோம் என்று வீரன் குறிப்பிட்டார்.

Leave a Reply