தைப்பிங் தொகுதி மஇகா ஏற்பாட்டில் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன

Malaysia, News, Politics

 122 total views,  1 views today

ரா.தங்கமணி

தைப்பிங்-

தைப்பிங் தொகுதி மஇகா ஏற்பாட்டில் தீபாவளி அன்பளிப்பு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற இந்நிகழ்வை தைப்பிங் தொகுதி தேசிய முன்னணித் தலைவரும் தைப்பிங் தொகுதி அம்னோ தலைவருமான டத்தோ ஹாஜி ஷாலிமின்  ஷாஃபி தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வசதி குறைந்தவர்கள், முதியவர்கள் என 150 பேருக்கு அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்று தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் மு.வீரன் குறிப்பிட்டார்.

தீபாவளி திருநாளை வசதி குறைந்தவர்களும் எவ்வித குறைகளும் இன்றி கொண்டாடி மகிழ வேண்டும் எனும் நோக்கில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

விளம்பரம்

Leave a Reply