
தைப்பூச விழாவை நடத்த தடை இல்லை; பிரதமர் இணக்கம்- டத்தோஶ்ரீ சரவணன்
654 total views, 1 views today
ரா.தங்கமணி
கோலாலம்பூர்,டிச.11-
அடுத்தாண்டு தைப்பூச விழா எவ்வித தடையும் இன்றி நடத்தப்படுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இணக்கம் கண்டுள்ளதாக மஇகாவின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் குறிப்பிட்டார்.
தைப்பூச விழாவின் சிறப்பம்சமான காவடிகள், ரத ஊர்வலம் ஆகியவை வழக்கம் போல் நடத்தப்படுவதற்கு எவ்வித தடையும் இருக்காது.
ஆனால் நாட்டில் நிலவும் கோவிட் பொருந்தொற்றை கருத்தில் கொண்டு எஸ்ஓபி விதிமுறைகள் கடுமையாக்கப்படலாம் என்று நேற்று நடைபெற்ற மஇகா, இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி மாநாட்டை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.
பிரதமர் நேற்று சந்தித்து தைப்பூச விழா விவகாரம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
தைப்பூச விழாவை நடத்துவதற்கான எஸ்ஓபி விதிமுறைகள் வரும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.
புதிதாக உருமாறியுள்ள ஒமிக்ரோன் கோவிட் தொற்று காரணமாக தைப்பூச விழாவுக்கான ரத ஊர்வலம் நடத்த அனுமதிக்கப்படாது என்று ஒற்றுமை துறை அமைச்சர் ஹலீமா சித்திக் கூறியது அண்மையில் சர்ச்சையாக வெடித்தது.
இதனிடையே, கேஎல்சிசி-இல் நடைபெற்ற நடப்பு அரசாங்கத்தின் 100 நாள் நிறைவு நாள் கொண்டாட்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றது தொடர்பில் டத்தோஸ்ரீ சரவணன் வெளியிட்டிருந்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலானது.