தைப் பொங்கல் தித்திப்பாய் அமையட்டும்- கணபதிராவ்

Malaysia, News

 179 total views,  3 views today

ஷா ஆலம்-

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இன்று பிறந்திடும் தை மாதம் அனைத்து மக்களின் வாழ்விலும் சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.


கெரொனா எனும் பிணி கடந்த ஈராண்டுகளாக உலகை ஆட்டி படைப்பதோடு மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது. அதோடு இயற்கை சீற்றமும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு மருட்டலாக உள்ளது.


கொரோனாவுக்கு மத்தியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான மக்களின் துயரங்கள் மறைந்து இனிவரும் காலம் அவர்களின் வாழ்வில் வசந்தகாலம் வீசிட பிறந்திருக்கும் தை மாதம் இனிதாய் தொடங்கட்டும்.


வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மத்தியில் போராடி கொண்டிருந்தாலும் கொரோனாவுக்கு எதிராக போராட்டத்தை கைவிட்டு விடாமல் எப்போதும் விழிப்போடு இருப்போம். குதூகலமாய் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்வோம் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

Leave a Reply