தொகுதி வழங்காத முடிவை ஏற்கிறோம்- டத்தோஶ்ரீ தனேந்திரன்

Malaysia, News, Politics

 380 total views,  4 views today

ஜோகூர்பாரு-

ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்யிட வாய்ப்பளிக்கப்படாத முடிவை மலேசிய மக்கள் சக்தி கட்சி ஏற்றுக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் தேசிய முன்னணி ஒரு தொகுதியி தங்களுக்கு வழங்க முன்வந்தது, ஆயினும் வெற்றியை கருத்தில் கொண்டு அத்தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தோம்.

அதோடு தொகுதிகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இருந்தன. கூட்டணி கட்சிகளான மசீச 15 இடங்களும் மஇகா 4 தொகுதிகளும் வழங்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தன. எனவே நட்பின் அடிப்படையில் அம்னோவுக்கு தாங்கள் வழிவிட்டோம்.

எனினும் தேசிய முன்னணியின் வெற்றிக்காக மலேசிய மக்கள் சக்தி கட்சி தொடர்ந்து ஆதரவாக செயல்படும் என்று பெனுட், சங்லாங்கில் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் ஆகியோருடன் வாக்காளர்களைச் சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

Leave a Reply