‘தொங்கு நாடாளுமன்றம்’- தொடரும் பேச்சுவார்த்தை

Malaysia, News, Politics

 51 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் அறுதி பெரும்பான்மையை எந்த கூட்டணியும் பெறாததால் ‘தொங்கு நாடாளுமன்றம்’ நிலை ஏற்பட்டுள்ளது.


நேற்று நடைபெற்ற வாக்களிப்புக்கு பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 82 தொகுதிகளையும் பெரிக்காத்தான் நேஷனல் 73 தொகுதிகளையும் தேசிய முன்னணி 30 நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஜிபிஎஸ் 22 தொகுதிகளையும் ஜிஆர்எஸ் 6 தொகுதிகளையும் வாரிசான் 3 தொகுதிகளையும் சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளையும் கேடிஎம், பிபிஎம் தலா 1 தொகுதியையும் வென்றுள்ளன.
அரசாங்கத்தை அமைக்க மக்களவையில் தேவையான 112 இடங்களை எந்தவொரு கூட்டணியும் பெறாத நிலையில் புதிய அரசாங்கம் எது?, புதிய பிரதமர் யார்? என்ற எதிர்பார்ப்பு மலேசியர்களிடையே நீடிக்கிறது.


பெரிக்காத்தான் நேஷனலும் பாரிசான் நேஷனலும் கூட்டணி அமைத்து அரசாங்கத்தை அமைக்கலாம் எனவும் தேசிய முன்னணியுடன் இணைந்து பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைக்கலாம் எனவும் ஆதாரமற்ற தகவல்கள் பரவி கொண்டிருக்கின்றன.
கூட்டணி அமைப்பது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


நிலைமை இவ்வாறிருக்க நாளை 21ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்குள் பிரதமர் பெயர் பட்டியலை சமர்ப்பிக்கும்படி கட்சிகள், கூட்டணிகளுக்கு அரண்மனை தரப்பு உத்தரவிட்டுள்ளது.


யார் யாருடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைப்பார்கள் என்பதற்கு நாளை விடை கிடைத்து விடும்.

Leave a Reply