நஜிப்பின் சிறைவாசம் நம்பிக்கைக் கூட்டணியின் எழுச்சிக்கு வித்திடுமா ?

Malaysia, News, Politics

 75 total views,  1 views today

காஜாங் – 24 ஆகஸ்டு 2022

முன்னாள் பிரதமரும் தேசிய முன்னணியின் முக்கியத் தூணாக விளங்கியவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் இரசாக்  ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ள வேளையில் தேசிய முன்னணியின் முன்னணி அரசியல் எதிரியும் எதிர்க்கட்சியுமான நம்பிக்கைக் கூட்டணிக்கு மீண்டும் புத்ராஜெயாவைக் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமது எழுத்தாலும் எழுச்சிமிகு உரையாலும் நம்பிக்கைக் கூட்டணியின் தாக்குதல்களுக்குத் தடையாக இருந்தார் நஜிப்.

அவர் மீதான இந்தக் குற்றச் சாட்டால் அம்னோ தனது பிரம்மாஸ்திரத்தை இழந்துள்ளது. இது தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரத்திற்குப் பெரும் சறுக்கலாகவும் கருதப்படுகிறது.

நஜிப்பின் தொடர் தாக்குதல்கள் நம்பிக்கைக் கூட்டணியின் மீதான மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்திருப்பதோடு அதன் மீட்சியை இன்னும் தொடங்கவில்லை எனலாம்.

சமூக ஊடகங்களில் அவரது பதிவுகள் மிகவும் உறுதியானதாகவும் பலரது கவனத்தை ஈர்க்கும் வண்ணமாகவும் இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

4.6 மில்லியன் பேர் அவரை சமூக ஊடகப் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். அவரது ஒவ்வொரு பதிவுக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிகின்றன. எதிர்க்கட்சித் தரப்பில் இவர் அளவுக்கு எவரும் புகழ் வாய்ந்தவராக இருப்பதாகத் தெரியவில்லை.

தற்போது சமூக ஊடகத்தில் அம்னோ தமது முக்கியப் படைத் தளபதியை இழந்துள்ள வேளையில், தேர்தல் உடனடியாக நடத்தப்படா விட்டால்  மீண்டும் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பி மிக உறுதியாகவும் இருக்கிறது.

அதே சமயம், நஜிப்பின் தண்டனை அம்னோ – தேசிய முன்னணிக்கு அனுதால வாக்குகளைக் குவிக்கும் தன்மை இருப்பதாகவும் கருதப்படுகிறது.

மேலும், நஜிப்பை வெறுக்கும் அல்லது ஒதுக்கும் அம்னோ ஆதரவாளர்கள் கீண்டும் அம்னோவுக்குத் திரும்பும் வாய்ப்பும் ஏற்படக் கூடும்.

எதிர்க்கட்சியினரை நேருக்கு நேர் துணிச்சலாக எதிர்க்கும் ஒரு தலைவர் தற்போது அம்னோ – தேமுவுக்கு இல்லாத நிலை அக்கட்சிக்குப் பெரும் தாக்கத்தை எற்படுத்தி இருக்கிறது.

ஜோகூர், மலாக்கா ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் நஜிப்பின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. எனவே, தேசிய முன்னணி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் முந்தைய வெற்றிச் சூட்டோடு இந்த வெற்றியையும் கொண்டாட உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது எனலாம்.

உடனடியாகத் தேர்தல் நடத்தப்படா விட்டால், தேமுவின் அனுதாப வாக்குகளை அதன் எதிர்த்தரப்பினர் முறியடிக்கும் முயற்சிக்கானக் காலமாக அமைந்திடும் என்பதையும் யாரும் மறுப்பதற்கு இல்லை.

Leave a Reply