நஜிப்புக்கு 5ஆவது முறையாக அபராதம்

Malaysia, News, Politics

 202 total views,  1 views today

ஜோகூர்பாரு-

ஜோகூர் மாநில தேர்தலை  முன்னிட்டு ஸ்கூடாய் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு மீண்டும் அபராதம் விதிக்கபட்டது.

200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் கோவிட்-19 விதிமுறையை மீறியதற்காக அவருக்கு  இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இது அவருக்கு விதிக்கப்படும் 5ஆவது அபராதமாகும்.

ஸ்கூடாய் தொகுதியில் போட்டியிடும் மசீச வேட்பாளர் லிம் சூன் ஹாய்க்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட நஜிப் உரையாற்றுகையில், ஜசெக சீனர்களின் முன்னேற்றத்தை கண்டுகொள்ளவில்லை.

தாம் பிரதமராக இருந்த காலத்தில் துன்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட மானியத்தை ஜ.செ.க. குறைத்த விவகாரத்தை நஜிப் தமதுரையில் சாடினார்.

Leave a Reply