
நஜிப் குற்றவாளியே ! தண்டனையை நிலை நிறுத்தியது கூட்டரசு நீதிமன்றம் !
209 total views, 1 views today
புத்ராஜெயா – 23 ஆகஸ்டு 2022
முன்னாள் பிரதமர் நஜிப் துன் இரசாக் தொடர்புடைய SRC International ஊழல் வழக்கில் அவருக்கு உயர்நீதிமன்றம் விதித்தத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் நிலை நிறுத்தியது.
எனவே. பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இன்று முதல் சிறைவாசம் இருப்பார்.
கடந்த 28 ஜூலை 2020இல் நஜிப் மீது மூன்று நம்பிக்கை துரோக குற்றச்சாட்டுகள், ஓர் அதிகார முறைகேடல் குற்றச் சாட்டு, ரிம 42 மில்லியனை உட்படுத்திய மூன்று கருப்புப் பணமோசடி குற்றச்சாட்டுகள் ஆகியன சுமத்தப்பட்டன. இந்த வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் நடந்து வந்தது.
அங்கு அவருக்கு 12 ஆண்டுகால சிறை தண்டனையும் ரிம 210 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பு குறித்து நஜிப் தமது மேல் முறையீட்டை கடந்த 8 திசம்பர் 2021 ஆம் நாள் தாக்கல் செய்தார். இருந்தும் இன்று கூட்டரசு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை நிலை நிறுத்தியது.