நஜிப் வழக்கில் தலையிட எனக்கு நெருக்கடி கொடுக்கப்படவில்லை ! – பிரதமர் இஸ்மாயில் சப்ரி

Crime, Malaysia, News, Politics

 75 total views,  2 views today

புத்ராஜெயா – 23 ஆகஸ்டு 2022

முன்னாள் பிரதமர் நஜிப் ஊழல் வழக்கில் தமது தலையீடு இருக்க நெருக்கடி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கூற்றை பிரதமர் இஸ்ஆயில் சப்ரி மறுத்துள்ளார்.

நேற்று இரவு அம்னோ தொகுதித் தலைவர்களை ஶ்ரீ பெர்டானாவில் அவர் சந்தித்ததாகக் கூறப்படுவது குறித்து ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு அவர் இல்லை என பதில் அளித்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது பிரதமருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கூற்றை அவர் மறுத்துள்ளார்.

“அந்தச் சந்திப்பில் கட்சியின் செயல்பாடுகள், கட்சியை வலுபடுத்தும் நடவடிக்கைகள், தேர்தலை நோக்கிய தயார்நிலைகல் ஆகியவை மட்டுமே கலந்துரையாடப்பட்டது.”

ஆனால், கோலாலம்பூர் டத்தோ ஓன் கட்டடத்தில் உள்ள அம்னோ அலுவலகத்தில் நடந்த சந்திப்புக் கூட்டத்திற்குத் தாம் வரவில்லை என்றார் அவர்.

Leave a Reply