நடப்பதற்கு சோம்பேறி : மலேசியாவுக்கு 3வது இடம் !

Malaysia, News, World

 78 total views,  1 views today

கோலாலம்பூர் – 19 ஆகஸ்டு 2022

அமெரிக்கா, காலிஃபோர்னியாவில் இருக்கும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நடப்பதற்கு சோம்பேறித்தனம் கொண்ட நாடுகளில் மலேசியா 3வது இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

111 நாடுகளில் இருந்து 717,527 பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில் இத்தகைய முடிவு கிடைத்துள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக மலேசியர்கள் 3,963 அடிகளே நடப்பதாக அந்த ஆய்வில் கூறப்படுகிறது. முதல் இடத்தில் இருக்கின்ற இந்தோநேசியர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,513 அடிகளும் இரண்டாம் இடத்தில் இருக்கும் சவுதி அரேபியர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,807 அடிகளும் நடப்பதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மேலும், மிகக் குறையாக நடக்கின்ற நாடுகளில் உடல் பருமன் பிரச்சனை கொண்டவர்கள் அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு குறைந்தது நடக்க வேண்டிய தூரம் 5,000 அடிகள் எனக் குறிப்பிறது உலக சுகாதார அமைப்பு.

Leave a Reply