நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளாராக தம்பூனில் போட்டியிடுகிறார் அன்வார் இபுராகிம் !

Malaysia, News, Politics, Polls

 98 total views,  1 views today

– குமரன் –

ஈப்போ – 20-10-2022

நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் களமிறங்கும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் அன்வார் இபுராகிம் இம்முறை தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்

மிக எளிதில் வெற்றி கொள்ளக் கூடியத் தொகுதியைத் தாம் தேர்தெடுக்க வில்லை எனக் குறிப்பிட்ட அவர், தம்பூனை வெள்ளி கொள்ளத் தமக்கத் துணிச்சல் இருப்பதாவும் குறிப்பிட்டார்.

பேரா, கெடா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இருக்கும் நமது தோழர்கள் நம்முடையத் துணிச்சலைப் பார்க்க வேண்டும். நமது போராட்டத்தின் முன்வரிசை எடுத்துக் காட்டாக பேரா மாநிலம் திகழ வேண்டும்.

மேலும், அவரே நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என அக்கூட்டணியின் செயலாளர் சைஃபுடின் நசுஷன் என ஈப்போவில் நடந்த நம்பிக்கைக் கூட்டணியின் மாநாட்டில் அறிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியை இளைஞர் விளையாட்டு அமைச்சர் அகமாட் ஃபைஸாக் அஸுமு வெற்றி கொண்டார்.

இம்முறை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் தம்பூன் தொகுதியில் அன்வார் போட்டியிடக் கூடும் என ஆருடம் வலுத்து வந்த நிலையில் அதனைத் தாம் வரவேற்பதாக அகமாட் ஃபைஸா; அஸுமு கூறி இருந்தார்.

முன்னதாக, துரோகளின் தொகுதிகளில், குறிப்பாக தம்பூன் தொகுதியில் அன்வார் இபுராகிம் போட்டியிட பேரா மாநில ஜ.செ.க. அழைப்பு விடுத்திருந்தது

Leave a Reply