நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதலில் சரி பாருங்கள் ! – ம.இ.கா.

Malaysia, News, Politics

 165 total views,  2 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 14 செப் 2022

கடந்த 14வது பொதுத் தேர்தலின்போது நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றது. வெற்ற பெற்ற பிறகு அவர்கள் இந்தியர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை முதலில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இபுராகிம் சரி பார்க்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார் ம.இ.கா.வின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன்.

நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் மிண்டும்  நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால், இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட மித்ரா, மைக்கா நிறுவனம், எம்ஐஇடி ஆகிய மூன்று அமைப்புகளின் மீதும் அக்கூட்டணி கணக்காய்வு நடத்தும் என அன்வாரின் கூற்றுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விக்னேஸ்வன் அவ்வாறு தெரிவித்தார்.

தேசிய முன்னணியில் இந்தியர்களுக்கான செயல் திட்டங்களை நாங்கள் வகுத்து வைத்துள்ளோம். ஆனால், கடந்த 22 மாதகால ஆட்சியில் இந்தியர்களுக்கான அவர்களின் திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை. இதனை முதலில் அன்வார் சரி பார்க்க வேண்டும் என்றார் அவர்.

குறிப்பிட்ட அந்த மூன்று அமைப்புகளில் நடந்திருக்கும் ஊழல் குறித்து மலேசிய இந்தியர்களுக்குத் தெரிய படுத்த வேண்டும். அதன் பொருட்டு அவற்றின் மீது சோதனை நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் அன்வார் இபுராகிம் கடந்த செப் 10 ஆம் நாள் இந்திய சமுதாயத்துடனான சந்திப்பின்போது உரையாற்றுகயில் குறிப்பிட்டிருந்தார்.

ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அது முறையாகக் கவனிக்கவும் கட்டுப்படுத்தப்படவும் இல்லை. தாம் நிதி அமைச்சராக இருந்த காலம் தொட்டே மைக்கா நிறுவனத்தின் இந்தக் கோளாறு நேர்ந்துள்ளதாகவும் அதே சிக்கல் எம்ஐஇடி, மித்ராவிலும் நடந்திருப்பதாக அன்வார் பேசியிருந்தார்.

Leave a Reply