நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கிறார் ஷாஷா

Malaysia, News, Politics

 20 total views,  1 views today

ரா.தங்கமணி

கம்பார்-

மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியிம் நம்பிக்கை நட்சத்திர வேட்பாளராக திகழ்கிறார் ஷாஷா வீரையா. பிஎச் கூட்டணியின் வேட்பாளராக களம் கண்டுள்ள ஷாஷா இங்குள்ள அனைத்து இன மக்களின் நம்பிக்கை பாத்திரமாக உருவெடுத்து  வருகிறார்.

மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் கூட்டணி, நம்பிக்கைக் கூட்டணி என இதற்கு முன் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ‘தவளைகள்’ தங்களது சுயநலனுக்கான கட்சி தாவல் செய்துள்ளனர்.

மக்களின் ஆதரவை பெற்ற பின்னர் நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்த இரு சட்டமன்ற உறுப்பினர்களை போல் இல்லாமல் பிஎச் கூட்டணிக்கும் ஜசெக கட்சிக்கும் ஒரு நம்பிக்கை பாத்திரமாகவே திகழ்கிறார். அதன் அடிப்படையிலேயே மாலிம் நாவார் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு ஷாஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நம்பிக்கைக் கூட்டணியின்  நம்பிக்கை பாத்திரமாக திகழ்ந்த ஷாஷா தற்போது மேற்கொண்டு வரும் தீவிர பரப்புரையின் காரணமாக இங்குள்ள மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவே உருவெடுக்கிறார்.

நாட்டின்  15ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில்  மக்கள் பிரதிநிதியாக ஷாஷா ஜொலிப்பார் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply