நம்பிக்கை வாக்கெடுப்பு தயார்- பிரதமர்

Uncategorized

 243 total views,  2 views today

புத்ராஜெயா-

நாடாளுமன்றத்தில் தனக்கான பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்கும் பொருட்டு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டட்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
அதுவரையிலும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் ஆட்சி தொடரும் என்றும் பிரதமர் பதவியிலிருந்து தாமாக விலக மாட்டேன் என்றும் பிரதமர் முஹிடின் யாசின் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்பு உரையில் குறிப்பிட்டார்.
தமக்கான பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பொருட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு மக்களவையில் நடத்தப்படும் என மாமன்னரிடம் தெரிவித்துள்ளேன். எனக்கு இன்னமும் பெரும்பான்மை உள்ளது. எப்போது பதவி விலகுகிறேன் என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தொடரும். மக்களுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு உதவித் திட்டங்கள் ஒருபோதும் தடைபடாது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி திட்டத்தில் எவ்வித தடங்கலும் ஏற்படாது என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply