நவம்பருக்குள் களைக்கப்படுமா சிலாங்கூர் சட்டமன்றம் ? ஆண்டிறுதியில் தேர்தலா ?

Malaysia, News, Politics

 198 total views,  2 views today

ஷா ஆலாம் – 2 ஆகஸ்டு 2022

நாட்டின் 15வது பொதுத் தேர்தலை  உன்னிட்டு இவ்வாண்டு நவம்பருக்குள் நாடாளுமன்றம் களைக்கப்படுமேயானால், அதே சமயத்தில் சிலாங்கூர் மாநில சட்டமன்றமும் களைக்கப்படும் என சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூர் சட்டமன்றத்தின் அடுத்த அமர்வுக்கு முன்னர் களைக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதை தாம் நம்புவதாகவும், அவ்வாறு நேர்ந்தால் தாம் அனைவரிடத்திலும் மன்னிப்பு கோருவதாகவும் அமிருடின் ஷாரி கூறினார்.

அப்படி இல்லை என்றால், நவம்பரில் சிலாங்கூர் மாநில வரவு செலவு விவாதக் கூட்டத்தில் சந்திக்கலாம் எனவும் அவர் கோடி காட்டினார்.

எனவே, இப்போது நடந்து வந்தக் கூட்டத்தை சிலாங்கூர் மாநில வரவு செலவு அறிக்கை விவாதக் கூட்டத்திற்காக அடுத்து முடிவு செய்யப்பட இருக்கும் ஒரு தேதிக்கு ஒத்தி வைக்க அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் தமது ஆட்சி உறுதியாகத் தொடரும் என இவ்வாண்டு மார்ச் மாதம் அமிருடின் ஷாரி தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் கூற்று எதிர்மறையானதாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, நம்பிக்கைக் கூட்டணியின் இதர மாநில முதல்வர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைகளுக்குப் பின்னர் இந்தத் தவணை நிறைவு பெறும் காலக் கட்டமான அடுத்த ஆண்டு ஏப்பிரல் அல்லது மே மாதம் வரை நீடிக்க முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, இவ்வாண்டு இறுதி வாக்கில் நாட்டின் 15வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் அதே சமயத்தில் பினாங்கு மாநிஅத் தேர்தலும் நடத்தப்படலாம் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

இருந்த போதிலும், நாடாலூமன்றம் களைக்கப்படும் அதே காலக் கட்டத்தில் பினாங்கு மாநில சட்டமன்றமும் களைக்கப்படுவது குறித்து மீண்டும் சீராய்வு செய்யப்பட வேண்டும் என அம்மாநில முதல் அமைச்சர் சோவ் கோன் இயோ குறிப்பிட்டார்.

Leave a Reply