நவம்பர் 10க்குள் பொதுத் தேர்தலா ?

Malaysia, News, Politics, Polls

 116 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 11/10/2022

ஆண்டிறுதியில் மழைக்காலம் நவம்பர் மத்தியில் தொடங்கக்கூடு எனக் கணிக்கப்பட்டுள்ள வேளையில், அதற்கு முன்னதாக,, நவம்பர் 10க்குள் நாட்டின் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என அரசியல் வட்டத்தில் இருந்து தகவல்கள் கூறுகின்றன.

நவம்பர் மாதம் 5 ஆம் நாளே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

மாமன்னரின் எண்ணத்தின்படியும் மழைக்காலத்தில் மக்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்காமலும் இருக்க நவம்பர் மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம்,

வேட்பாளர் பதிவு, பரப்புரைக் கால வரையறை, தேர்தல் நாள் ஆகியவற்றை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் இவ்வாரம் சந்திப்புக் கூட்டத்தை நடத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு, நாடாளுமன்றம் ஏப்பிரல் 7 ஆம் நாள் கலைக்கப்பட்டப் பிறகு மே 9 ஆம் நாள் புதன்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது.

2013 ஆம் ஆண்டில், ஏப்பிரல் 3 ஆம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டப் பிறகு மே 5 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை தேர்தல் நடத்தப்பட்டது.

13வது – 14வது பொதுத் தேர்தலின்போது பரப்புரைக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 2 வாரங்கள் ஆகும்.

Leave a Reply