நாகேந்திரனின் மரணத் தண்டனை ஒத்திவைப்பு

Malaysia, News

 167 total views,  1 views today

சிங்கப்பூர், நவ.9-

போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மரணத் தண்டனையை ஒத்தி வைக்க சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி வழகியுள்ளது.

நாகேந்திரனுக்கு எதிராக மரணத் தண்டனையை விதித்த அக்குடியரசின் உயர் நீதிமன்ற முடிவுக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும் மேல் முறையீட்டின் முடிவு வரும் வரை தண்டனையை ஒத்தி வைக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இம்முடிவை நாகேந்திரனின் வழக்கறிஞரான  எம்.ரவி தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

33  வயதான நாகேந்திரனுக்கு நாளை மரணத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply