நாகேந்திரனின் மேல் முறையீடு தீர்ப்பு ஒத்திவைப்பு

News, World

 108 total views,  1 views today

சிங்கப்பூர்-

போதைப்பொருள் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மரணத்தண்டனையை எதிர்நோக்கியிருந்த மலேசியராக நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மேல்முறையீட்டுக்கான தீர்ப்பு அறிவிப்பதை அந்நாட்டு மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
நாகேந்திரனின் மேல்முறையீட்டை சிங்கப்பூரின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் செவிமடுத்தனர்.
அந்த செவிமடுப்புக்கு பின்னர் தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும் விரைவில் திரும்பி வருகிறோம் எனவும் தலைமை நீதிபதி அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அறிவுகூர் சோதனையில் 70க்கும் குறைவான புள்ளிகளை பெற்றிருக்கும் நாகேந்திரனுக்கு சிந்திக்கும் திறன் குறைவு என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதாடினர்.
கடந்த 2009இல் போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை கடந்தாண்டு நவம்பரில் நிறைவேற்றப்படவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply