நாகேந்திரனின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்

Malaysia, News

 212 total views,  1 views today

சிங்கப்பூர்-

போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த மலேசியரான நாகேந்திரனின் மேல் முறையீட்டு மனுவை சிங்கப்பூர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

கடந்த 2009இல் போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை சிங்கப்பூர்  நீதிமன்றம் விதித்தது.

கடந்தாண்டு நவம்பரில் மரணத் தண்டனையைஎதிர்கொண்ட நாகேந்திரன் மேல் முறையீட்டு மனு தீர்ப்பு வரும் வரையிலும்  தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

நாகேந்திரனுக்கு சிந்திக்கும் திறன் குறைவு என்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குற்றம் புரிந்தபோது நாகேந்திரன் தெளிவான மனநிலையில்தான் இருந்தார் என்பதை ஏற்றுக் கொண்ட சிங்கப்பூர் நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தது.

Leave a Reply