நாகேந்திரனுக்கு இறுதி தீபாவளி?

Uncategorized

 474 total views,  1 views today

கோலாலம்பூர்,நவ.3-

இன்று கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை அனைத்து இந்துக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் வேளையில் போதைப்பொருள் குற்றத்திற்காக தூக்குத் தண்டனையை எதிர்கொண்டுள்ள நாகேந்திரன் இவ்வாண்டு தீபாவளி இறுதி தீபாவளியாக மாறியுள்ளது.

வரும் 10ஆம் தேதி சிங்கப்பூர், சாங்கி சிறைச்சாலையில் நாகேந்திரன் கே.தர்மலிங்கத்திற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இதன் தொடர்பில் அக்டோபர் 26இல் மின்னஞ்சல் வாயிலாக சிங்கப்பூர் சிறை நிர்வாகத்திடமிருந்து நாகேந்திரன் குடும்பத்தினர் கடிதத்தை பெற்றுள்ளனர் என்று அவரின் சகோதரி ஷர்மிளா தர்மலிங்கம் கூறினார்.

தீபாவளி விடுமுறையில்  மகனை காண்பதற்காக சிங்கப்பூருக்கு செல்லவிருக்கும் அவரது தாயார் திருமதி பாஞ்சாலை சுப்பிரமணியம், விடுமுறையை முழுவதும் அங்கேயே செலவிடவுள்ளார்.

கடந்த 2009 ஏப்ரல் 22ஆம் தேதி 42.27 கிராம் டையாமோர்பின் போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக சிங்கப்பூர் அதிகாரத்துவ தரப்பினரால் கைது செய்யப்பட்டார்.

2010 நவம்பர் 22ஆம் தேதி நாகேந்திரனுக்கு மரணத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிபரின் கருணை மன்னிப்பு உட்பட இறுதி கட்டம் வரையிலும் நாகேந்திரனின் தண்டனை தொடர்பில் செய்யப்பட்ட அனைத்து மேல் முறையீடுகளும் நிராகரிப்பட்டன.

26-X-32-2021-2

Leave a Reply