நாகேந்திரனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

Crime, Malaysia, News, World

 512 total views,  2 views today

சிங்கப்பூர்-

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு  சிங்கப்பூர் சிறையில் இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நுண்ணறிவு குறைபாட்டினால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரனுக்கு தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று உள்நாடு, வெளிநாட்டிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

தூக்கு தண்டனையிலிருந்து நாகேந்திரனை காப்பாற்ற அவரின் தாயார் மேற்கொண்ட இறுதி முயற்சியும் தோல்வி அடைந்த நிலையில் இன்று காலை சாங்கி சிறையில் நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டார்.

12 ஆண்டுகளுக்கு முன்43 கிராம் எடை கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்தியதாக நாகேந்திரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பர் மாதமே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில் கோவிட் பாதிப்பு காரணமாக தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

நாகேந்திரனின் இறுதிச் சடங்கு ஈப்போவில் நடைபெறும் என்று அவரின் சகோதரர் நவீன் குமார் தெரிவித்தார்.

Leave a Reply