நாடற்றக் குழந்தைகளுக்கு குடியுரிமைதான் சிறந்த மெர்டேகா பரிசு ! – சார்லஸ் சந்தியாகோ

Malaysia, News, Politics

 267 total views,  1 views today

கிள்ளான் – 31 ஆகஸ் டு 2022

இவ்வாண்டு விடுதலை நாளை முன்னிட்டு நாடற்றக் – குடியுரிமை அல்லாதக் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது சிறந்த மெர்டேகா பரிசு எனக் குறிப்பிட்டுள்ளார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ.

விடுதலை பெற்று 65 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் பல மலேசியக் குழந்தைகளின் வாழ்க்கை இருளில் இருந்து வந்திருந்தது. குடியுரிமை இல்லாதக் காரணத்தால் கல்வி, சுகாதாரம் ஆகியன மறுக்கப்பட்டிருந்தது என அவர் மேலும் சொன்னார்.

இவர்களை வாழ்க்கை மேம்பட வேண்டும். அதன் பொருட்டு இவர்களின் விண்ணப்பங்கள் மறுபரிசோலனை செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.

பல்வேறு மாறுபட்ட செயல்முறைகளைத் தவிர்த்து ஒரே சீரான நடைமுறையை உருவாக்க வேண்டும்.

கனவுகளும் ஆசைகளும் கொண்ட இவ்வாறானக் குழந்தைகள் பலர் தர்போது பெரியவர்களாகவும் வளர்ந்து விட்டனர், அதனை அவர்களை அடையவும் இல்லை என்பதோடு பல சமூக சீர்கேட்டுப் பாதிப்பையும் சந்தித்திருக்கின்றனர்.

எனவே, இவ்விவகாரத்தை பிரதமர் இஸ்மாயில் சப்ரி மறுப்பரிசீலனை செய்ய வேண்டும் என சந்தியாகோ சொன்னார்.

Leave a Reply