நாடாளுமன்றக் கலைப்பு : இணையவாசிகளின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கின்றது ?

Malaysia, News, Politics, Polls

 117 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 10/10/2022

நாட்டின் 15 வது பொதுத் தேர்தல் நடத்தப்பட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை இன்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இணைய வாசிகள் தங்களின் எண்ண ஓட்டத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.

“எது எப்படி இருந்தாலும், யார் என்ன சொன்னாலும், செய்தாலும், நாம் நமது மக்களாட்சிக் கடமையை நிறைவேற்ற வாக்களிக்கச் செல்வோம்! நாமே மாற்றத்திற்கானக் காரணமாக அமையக் கூடும் !” என டிவிட்டரில் @natmaurice என்பவர் பதிவு செய்தார்.

“Walau apapun orang kata dan lakukan, mari pergi dan mengundi. Anda tidak tahu, kita mungkin menjadi penentunya,”

மற்றொரு பயனரான @Fxashley குறிப்பிடுகயில், அண்டை அயலார், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செல்ல நினைவுறுத்துவோம் என்றார். வாய்வழிப் பரப்புரை இன்னும் வலிமையாகச் செயல்படும் எனவும் குறிப்பிட்டார்.

“orang ramai untuk mengingatkan jiran, keluarga dan rakan-rakan mereka untuk mengundi dan “menumbangkan Umno. Kempen dari mulut ke mulut lebih berkesan,”

பொறுப்புணர்வைப் பற்றி கற்பித்து தே.மு. அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்க நேரம் வந்து விட்டது. அவர்களைப் புறக்கணிப்போம் என @kusanvinvin தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மழைக்காலத்தில் தேர்தல் நடத்தப்படுவது குறித்து பல இணைய வாசிகள் விமர்சித்து வந்துள்ளனர்.

வெள்ளம் ஏற்படும் காலத்தில்தான் நாம் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். மன உளைச்சலாக உள்ளது என @IzzraifHarz குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில நாட்களில் பெரும் மழைக் காலத்தில் சந்திக்க உள்ளோம், ஆனால் இன்னும் 60 நாட்களில் தேர்தல் நடத்தப்போகிறார்கள்? என@anushaa_s தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply