நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுகிறேன் – கணபதிராவ்

Malaysia, News, Politics

 156 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அறிவித்தார்.

கடந்த இரு தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராகவும் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளேன். இந்த பதவிகள் எனக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும் எனும் நோக்கில் நாடாளுமன்றத்தை நோக்கி பயணிக்கவிருப்பதாக அவர் சொன்னார்.

ஜசெக தலைமையகம் எடுத்துள்ள முடிவுக்கேற்ப தாம் நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிடுவதாக கூறிய கணபதிராவ், சிலாங்கூர் மாநிலத்தில் எந்த தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பதை தெரிவிக்க மறுத்து  விட்டார்.

விளம்பரம்

Leave a Reply