நாடாளுமன்றத்தில் நுழைய எதிர்க்கட்சி எம்பி-களுக்கு அனுமதி மறுப்பு

Malaysia, News, Politics

 176 total views,  2 views today

கோலாலம்பூர்-

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் நுழைய முற்பட்ட வேளையில் போலீசாரின் கெடுபிடியால் அவர்களால் நாடாளுமன்றத்தில் நுழைய முடியவில்லை.
கோவிட்-19 காரணமாக இன்று நடைபெற வேண்டிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறாது என கூறப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவோம் என கூறியிருந்தனர்.
அதன்படி இன்று காலை நாடாளுமன்றத்தில் நுழைய இன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்த நிலையில் எப்ஆர்யூ போலீசாரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதற்கு முன்னதாக மெர்டேக்கா சதுக்கத்தில் ஒன்று திரண்ட அவர்கள் ‘தோல்வி அடைந்த அரசாங்கம்’, முஹிடின் பதவி விலகு’ என கூச்சலிட்டவாறே நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி நடந்தனர்.

Leave a Reply