நாடாளுமன்றத்தை கலைக்க கோரிக்கை விடுக்கிறார் பிரதமர்?

Uncategorized

 356 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தை பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கலைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான கோரிக்கையை டான்ஶ்ரீ முஹிடின் யாசின் முன்வைக்கவிருப்பதாகவும் இன்று மதியம் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு 90 நாட்களுக்கு தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை முஹிடின் யாசின் கோருவதாக அறியப்படுகிறது.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டவிதிகளின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி விட வேண்டும் என கூறுகிறது.
டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்ட பின்னர் மிகப் பெரிய அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் முஹிடின் யாசின் அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பொதுத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருப்பதாக ‘கெராக் மலேசியா’ எனும் இணையதளம் கூறுகிறது.

Leave a Reply