நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்குகிறாரா இராமசாமி?

Malaysia, News

 180 total views,  1 views today

ஜோர்ஜ்டவுன், அக்.16-
வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி இம்முறை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று தவணைகளாக சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வரும் பேராசிரியர் இராமசாமி, இம்முறை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கலாம்.
கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பத்துகவான் சட்டமன்றத் தொகுதியிலும் 2013, 2018 பொதுத் தேர்தல்களில் பிறை சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு வென்ற இராமசாமி மூன்று தவணைகளாக பினாங்கு மாநில துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல செய்திகளுக்கு…

Leave a Reply