நாடாளுமன்றத் தொகுதியை குறிவைக்கிறாரா கணபதிராவ்?

Malaysia, News, Politics

 205 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் அதிகரித்தே காணப்படுகிறது.

தேர்தல் கேர்ந்திரத்தை தயார் நிலையில் முடுக்கி விட்டுள்ள தேசிய முன்னணி தாம் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளரை அடையாளம் கண்டு வைத்துள்ளதாகவே அறியப்படுகிறது.

அதுவே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலுள்ள கட்சிகள் இப்போதுதான் தாம் போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்துள்ள நிலையில் வேட்பாளர்களை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளது.

அவ்வகையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக உள்ள வீ.கணபதிராவ் இம்முறை நாடாளுமன்றத் தொகுதியை குறி வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

சிலாங்கூர் மாநிலத்தில் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் கணபதிராவ் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஏதேனும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படலாம்.

குறிப்பாக ஜசெகவின் வலுவான கோட்டையாக கருதப்படும் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக கணபதிராவ் களமிறங்கக்கூடும் என அறியப்படுகிறது.

ஏற்கெனவே கோத்தா அலாம் ஷா  தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கிள்ளான் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதோடு மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்து பல்வேறு சேவைகளின் வழி மக்கள் மத்தியில் பிரபலமானவராகவும் கணபதிராவ் திகழ்கிறார்.

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியை தவிர்த்து பிற  மாநிலங்களிலுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளிலும்  கணபதிராவ் வேட்பாளராக களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

இதர செய்திகள்;

Leave a Reply