நாடாளுமன்ற உறுப்பினர்களை போலீசார் தடுக்கவில்லை

Malaysia, News

 204 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைய எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் போலீஸ் தடுக்கவில்லை. மாறாக, சட்டவிரோத பேரணியையே போலீஸ் தடுக்க முற்பட்டது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.

அன்வார் இப்ராஹுமுடன் பலர் பங்கேற்கும் பேரணி நடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அனுமதிக்கப்படாத பேரணியை கட்டுப்படுத்தவே போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறாத போது தனிநபர்களோ வாகனங்களோ நாடாளுமன்றத்தில் நுழைவதை தடுக்கவே போலீசார் குவிக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

Leave a Reply