நாடி வந்தவர்களை வெறுமனே திருப்பி அனுப்பாதவர் துன் சாமிவேலு ! – லிங்கேஸ்வரன்

Malaysia, News, Politics

 61 total views,  1 views today

– இரா. தங்கமணி –

கோலாலம்பூர் – 15 செப் 2022

துன் ச.சாமிவேலுவின் திடீர் மறைவு இந்திய சமுதாயத்திற்கு மட்டுமின்றி தமிழ்ப்பற்றாளர்களுக்கும் பேரிழப்பு ஆகும். இந்நாட்டில் தமிழ் மொழி வாழ வேண்டும் என்பதற்காக தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு பாடுபட்டாரோ அதே போன்று தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு ஆற்றினார் எனறு சுங்கை சிப்புட் வட்டார தமிழ் நேசன் முன்னாள் நிருபர் எஸ்.லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

தமிழ் நேசன் நாளிதழை வழிநடத்தியதில் பெரும் பங்கு துன் சாமிவேலுவையே சாரும். அப்பத்திரிக்கை சமுதாய கடப்பாட்டோடு மக்களின் குரலாக ஒலித்திட வேண்டும் என்ற வேட்கையை அவர் கொண்டிருந்தார்.

2008ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட பின்னரும் இத்தொகுதி மக்களுக்கு சேவையாற்றுவதை தொடர்ந்து கொண்டிருந்தார். தன்னை நாடி வருபவர்களை வெறும் கையுடன் அனுப்பாத உன்னதத் தலைவராக துன் சாமிவேலு திகழ்ந்தார் என்பது அவருடன் நெருங்கி பழகிய தருணங்களில் உணர்ந்த உண்மையாகும்.

இளம் வயதிலிருந்து துன் சாமிவேலுவின் நடவடிக்கைகளை கவனித்து அவரின்பால் மஇகாவில் ஈர்க்கப்பட்டவன் நான் என்பதே எனக்கான பெருமையாகும். அவர் வாழும் காலத்தினூடே அவருடன் பணியாற்றிய தருணங்கள் இனிமையானவையாகும் என்று லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

Leave a Reply