நான் பிரதமரானால் என் ஊதியம், ஊக்கத் தொகை ஆகியவற்றைக் குறைத்திடுவேன் ! – அன்வார் இபுராகிம்

India, Malaysia, News, Polls

 111 total views,  1 views today

– குமரன் –

ஈப்போ – 20/10/2022

நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நம்பிக்கைக் கூட்டணீ வெற்றி பெற்றால் பிரதமரின் ஊதியத்தையும் ஊக்கத் தொகையையும் குறைத்திடுவதாகக் குறிப்பிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இபுராகிம்.

நம்பிக்கைக் கூட்டணி இம்முறை நடக்க இருக்கும் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பிரதமர் வேட்பாளரான அன்வாரின் முதல் நடவடிக்கை இதுவாக இருக்கும் என சொன்னார்.

பிரதமர் மட்டும் இல்லாமல் தமது அமைச்சரவை அங்கத்தினருக்கும் இதனையே நடைமுறை படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

நல்லதோர் எடுத்துக் காட்டாய் நாட்டின் தலைவர்கல் முதலில் விளங்க வேண்டும். இதுவே எனது வாக்குறுதி.

தற்போதையப் பொருளாதாரச் சூழலில் ஆடம்பரமான ஊதுயத்தைப் பெறத் தமது மனம் ஒப்பவில்லை எனக் கூறிய அவர், மக்கள் மீது அக்கறை கொண்ட பரிவுமிக்கத் தலைமைத்துவமாக இருக்க வேண்டும் என்றார்.

Leave a Reply