நாளை இரவு அம்னோ உச்சமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ?

Malaysia, News, Politics, Polls

 63 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 9/10/2022

அம்னோ கட்சியின் முக்கியமானத் தரப்பின் தகவலின்படி, நாளை இரவு அக்கட்சியின் உச்சமன்றக் கூட்டம் நடைபெற அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தின் முக்கிய அங்கமும் நோக்கமும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும், தேர்தல் தேதி குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து பரபரப்பான செய்திகள் கடந்த வாரங்களில் ஊடகங்களில் உலாவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வரும் பொதுத் தேர்தலில் அம்னோ – பாஸ் கட்சி ஒத்துழைப்பு குறித்து பேசப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும், நாளை நடக்கவிருக்கும் கூட்டம் முடிந்த பிறகே எதையும் உறுதியாக எதிர்ப்பார்க்கலாம்.

Leave a Reply