
‘நாளை’ என போட்டு ரசிகர்களை கடுப்பேற்றிய நெல்சன்
290 total views, 1 views today
சென்னை-
பீஸ்ட் ஹாஷ்டேக் கூட போடாமல் வெறும் “நாளை” என்று மட்டும் இயக்குநர் நெல்சன் ட்வீட் போட்டிருப்பது விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் அடுத்ததாக தலைவர் 169 என நடிகர் ரஜினிகாந்தின் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், வெறும் “நாளை” என மட்டும் தற்போது ட்வீட் போட்டிருப்பது விஜய் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. #Beast ஹாஷ்டேக் கூட நெல்சன் போடாத நிலையில், தான் இந்த குழப்பமே ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா அருள் மோகன் தலைவர் 169 படத்தில் நடிக்கப் போவது உறுதியாகி உள்ள நிலையில், அது தொடர்பான காஸ்ட் அப்டேட் தான் நாளை நெல்சன் சொல்லப் போகிறார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் சரியான டைமிங்கில் விஜய் ரசிகர்களை வம்பிழுத்துள்ளனர்.