நிதி – சொத்து கையாடல் : கோலாலம்பூர் இந்தியர் முன்னேற்ற அறவாரியத்தின் இயக்குநர் மீது குற்றச்சாட்டு !

Crime, News

 167 total views,  1 views today

கோலாலம்பூர் – 1 ஆகஸ்டு 2022

அதிகார முறைகேடல் ரிம 86,000 மதிப்புள்ள சொத்து – நிதி கையாடல் உள்ளிட்ட 11 குற்றங்கள் தொடர்பில் செஷன் நீதிமன்றத்தில் கூட்டரசுப் பிரதேசம் கோலாலம்பூர் இந்தியர் முன்னேற்ற அறவாரியத் தலைவர் 65 வயது மிக்க கோவிந்தராஜூ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகப் பணிபுரியும் கோவிந்தராஜு தாமான் இன்டெராவாசி, ஜாலான் செயின் ஃபேர்ரியில் இருக்கும் வங்கி ஒன்றில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 ஆம் நாள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட அந்த 11 குற்றங்களும் குற்றவியல் தடுப்புச் சட்டம் 403 – 406 இன் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை உறுதிப்படுத்தப்படும் நிலையில் அதிகப்படியாக 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறை, பிரம்படி, தண்டம் விதிக்கப்படலாம்.

அந்த 11 குற்றச்சாட்டுகளையும் கோவிந்தராஜு மறுத்துள்ளார்.

முன்னதாக, அனைத்துக் குற்றச் சாட்டுகளுக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய வழக்கறிஞர் முகம்மட் அலிஃப் அலி ரிம 50,000 பிணைப்பணம் செலுத்த வாய்ப்பு வழங்கினார். மேலும், மாதம் ஒரு முறை கோவிந்தராஜூ ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்குச் சென்று தமது வருகையை உறுதி செய்யும் வகையை செய்ய வேண்டும் என்பதோடு தமது பயண ஆவணங்களை நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விடவும் கூறப்பட்டது.

ஆனால், கோவிந்தராஜூ தரப்பில் வழக்கறிஞர் யாரும் வாதாட நிலையில், தமக்கு குறைந்தபட்ச பிணையை விதிக்க அவர் கேட்டுக் கொண்டார். மேலும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதனைப் பரிசீலித்து கோவிந்தராஜுவுக்குஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ரிம 2000 பிணைப்பணம் செலுத்தவும் மாதம் ஒரு முறை கோவிந்தராஜூ ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்குச் சென்று தமது வருகையை உறுதி செய்யும் வகையை செய்ய வேண்டும் என்பதோடு தமது பயண ஆவணங்களை நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விடவும் நீதிபதி ஸுல்ஹஸ்மி அப்துல்லா ஆணையிட்டார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்தெம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply