
நிதி மோசடி; தற்காப்பு வாதம் புரிய ஸாயிட்டுக்கு உத்தரவு
276 total views, 1 views today
கோலாலம்பூர்-
நம்பிக்கை மோசடி, ஊழல், கையூட்டு என் தம்மீது சுமத்தப்பட்ட 47 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தற்காப்பு வாதம் புரியும்படி அம்னோவின் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதை குற்றம் சாட்டிய தரப்பு நிரூபித்துள்ளதை அடுத்து ஸாயிட் தற்காப்பு வாதம் புரிய நீதிபதி கோலின் லாரன்ஸ் செக்கியூரா உத்தரவிட்டார்.
அகால் புஹாரி அறவாரியத்தில் நிதி மோசடி செய்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேமுவின் தலைவருமான டத்தோஶ்ரீ ஸாயிட் எதிர்கொண்டுள்ளார்.