நினைவு கல்லறைகளில் தூய்மையை பேணுவோம்

Malaysia, News, Politics

 355 total views,  1 views today

டி.ஆர்.ராஜா

பட்டர்வொர்த்.,நவ.13-
இந்துக்கள் மயானங்களில் உள்ள தங்கள் முன்னோர்களின் நினைவு கல்லறைகளில் சிறப்பு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பின்னர் படைக்கப்பட்ட உணவுகள் யாவும் அங்கேயே விட்டுச் செல்லப்படுகின்றது. தொடர்ந்து பலநாட்கள் அங்கேயே அந்த படையல் பொருட்கள் திறந்து கிடப்பதால் பூனை, நாய், பறவைகளினால் குப்பைக் காடாக மயானம் முழுவதும் காட்சியளிப்பதை சமீபத்தில் எடுக்கப்பட்ட படக்காட்சிகள் தெளிவாக காட்டுவதை காணமுடிந்தது.

முன்னோர்களின் நினைவுநாள், மாதாந்திர அமாவாசை திதி போன்ற தினங்களில் அவர்களுக்கு இல்லத்தில் படையல் இட்டு பூசையாற்றுவது குடும்ப பாரம்பரிய வழிபாட்டு முறை. பித்ரு வழிபாட்டில் தர்ப்பணம் கொடுப்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. கருப்பு எள் கலந்த நீர் மட்டுமே பித்ருக்களுக்கு தேவையான ஒன்று.

நாம் படையலில் பரிமாறும் உணவுகள் யாவும் மானசீகமாக நமது முன்னோர்களுக்கு அன்புடன் படைத்து பின்னர் அதனை குடும்பத்தில் உள்ளவர்கள் உண்பது அல்லது காக்கை மற்றும் பசுவுக்கு கொடுப்பதை நமது குடும்பங்களில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் வழக்கம். ஆகவே படையல் என்பது இல்லத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். மயானங்களில் நினைவு கல்லறைகளில் படையல் போடுவது என்பது தேவையற்ற ஒன்று என்பதை இந்து தர்ம மாமன்றத்தின் கருத்தாக வலியுறுத்துகின்றோம் மலேசிய இந்து தர்ம மாம்ன்றத்தின் பினாங்கு அருள் நிலைய தலைவர் ந தனபாலன் கூறினார் .

மயானத்தில் முன்னோர்களின் கல்லறைகளில் பன்னீர் தெளித்து, மலர்கள் தூவி வணங்கி நமது மரியாதையை அன்புடன் செலுத்துவது மிகச்சிறப்பான காரியமாகும்.
அப்படி தீபாவளி காலத்தில் மயானத்தில் படையல் போட்டு வழிபாடு செய்யும் வழக்கம் தவிர்க்கமுடியாது என்று கருதினால், அதன் பின்னர் படையல் உணவுகளை அவ்விடத்திலேயே விட்டுச் செல்லாமல், அவற்றை உடன் எடுத்து சென்று காக்கை அல்லது பசு போன்றவற்றுக்கு கொடுக்கலாம் அல்லது நீரோட்டங்களில் இட்டு மீன் போன்றவைக்கு உணவாக கொடுக்கும் தர்ம காரியத்தைச் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம். எனவும், இதன் வழி மயானங்களின் வளாகங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய இயலும். அவர் மேலு கூறினார் .

மயானத்தில் தீபாவளி காலத்தில் நாம் படையல் என்ற பேரில் அறியாமை காரணத்தால் செய்யும் செயலால் நமது மயானம் குப்பைக் கூளமாக காட்சி தரும் படக்காட்சிகள் முகநூல் மற்றும் தகவல் இணையங்களில் பகிரப்பட்டுள்ளது பலரின் மனதை மிகவும் வருத்தமுறச் செய்துள்ளது. நாம் அறியாது செய்துவரும் இது போன்ற தவறுகளை திருத்தி மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.மலேசிய இந்து சங்கத்தின் மாநில தலைவர் ம.முனியாண்டி கேட்டுக் கொண்டார்.


மயானம் ஓர் அமைதியான இடம் அவ்விடத்தை பொருப்பில்லாமல் அசுத்தபடுத்த கூடாது எனவும் ,பிற இனங்கள் அதனை பார்க்கும் போது பல்வேறு விசர்சனங்கள் தோன்றவும் நாம் வாய்ப்பளிக்க கூடாது என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார் .


,மயானங்கள் சுத்தமாக வைத்திருக்க பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பல நடவடிக்ககள் மேற்கொண்டு வருகின்றது. அவ்வபோது கூட்டுபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இருந்த போது வழிபாடுகளுக்காக வருகையளிக்கும் பொது மக்கள் பொறுப்பாக இல்லாமல் சில இடங்களை சேதம் படுத்துகின்றனர் என பினாங்கு இந்து அறப்பணியின் நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.இராமசந்திரன் கூறினார் .இந்துக்கள் இதனை தவிர்க்க வேண்டும் .நம் இடுகாட்டை நாம்தான் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் ,மக்கள் இதன் தொடர்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என டாக்டர் குணசேகரன் கேட்டுக் கொண்டார் .
வழிபாட்டு என்ற பேரில் தூய்மையான இடங்களை அசுத்தபடுத்தும் தரப்பினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கபட வேண்டும் ப .ஆறுமுகம் கேட்டுக் கொண்டார் .அதேவேளை சம்பந்தபட்ட இடங்களில் பாதகைகள் ,குப்பைதொட்டிகள் போன்றவற்றை வைப்பதன் வாயிலாக இங்கு வருவோர்கள் விழிப்புணர்வோடு இருப்பதோடு குறிப்பிட்ட இடங்களில் குப்பைகளை போட இயலும் என பினாங்கு இந்து இயக்கத்தின் தலைவர் ஆ ஜெயராமன் ,பினாங்கு மாநில சமூக நல மக்கள் ஒற்றுமை கழகத்தின் துணைத் தலைவர் ரா .ராஜா ஆகியோர் கேட்டுக் கொண்டர் .

Leave a Reply