நிபோங் திபாலில் டத்தோஶ்ரீ தனேந்திரனின் வெற்றி உறுதி செய்யப்படும்

Malaysia, News, Politics

 128 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனின் வெற்றி உறுதி செய்யப்படும் அக்கட்சியினர் சூளுரைத்தனர்.

தேசிய முன்னணியின் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு முதல்முறையாக மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய இளம் தலைமுறையின் மனமாற்றம், எதிர்க்கட்சியினர் மீதான மக்களின் நம்பிக்கையின்மை ஆகியவற்றின் காரணமாக தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அக்கட்சியின் இணையப் பிரிவு தலைவர் எம்.எல்.மணிவண்ணன் தெரிவித்தார்.

நிபோங் திபாலில் டத்தோஸ்ரீ தனேந்திரனின் வெற்றியை உறுதி செய்ய கட்சியின் தேர்தல் கேந்திரம் தீவிரமாக செயலாற்றும் என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply