நிருபர் லெட்சுமி ராஜுவுக்கு உதவிக்கரம் நீட்டியது பேரா போலீஸ் படை

Malaysia, News

 181 total views,  1 views today

லிங்கா, புனிதா சுகுமாறன்

ஈப்போ,அக்.23-

ஊடகத் துறையில் 15 ஆண்டுகளாக பணியாற்றிய திருமதி லெட்சுமி ராஜு, அண்மையில் பக்கவாத நோயினால் உடல் செயலிழப்பு ஆளான நிலையில் மனிதாபிமான அடிப்படையில் பேரா மாநில போலீஸ் படை உதவிக்கரம் நீட்டியது.

தமிழ் நாளிதழ் ஒன்றில் ஈப்போ வட்டார நிருபராக பணியாற்றிய திருமதி லெட்சுமி ராஜு, மிகவும் துடிப்பாற்றலுடன் செயல்பட்டு வந்த நிலையில் பேரா மாநில போலீஸ்  படையின் பல்வேறு செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஊடகத்துறையினருக்கும் போலீஸ் படைக்கும் இடையே அணுக்கமான உறவு பேணப்படுவது அவசியம் எனும் நிலையில்  திருமதி லெட்சுமி ராஜுவுக்கு உதவிக்கரம் நீட்ட போலீஸ் படை முடிவெடுத்தது என பேரா மாநில போலீஸ் படைத் தலைவர்  டத்தோ மியோர் ஃபரிடாதராஸ் தெரிவித்தார்.

E-Paper வடிவில் செய்திகளை படிக்க கீழே அழுத்தவும்…

திருமதி லெட்சுமி ராஜு ஊடகத்தின் வழி பேரா மாநில போலீஸ் படைக்கும் பொது மக்களுக்கும் ஓர் உறப்பாலமாக இருந்துள்ளார். அவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் தீபாவளி பெருநாள் காலத்தின்போது அவருக்கு துணையாக இருக்கும் வகையில் உணவுக் கூடைகளும் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

அதோடு, பேரா மாநில நகைக்கடை உரிமையாளர் சங்கத் தலைவர் டத்தோ அமால்டின் இஸ்மாயில், பெலித்தா உணவக குழும இயக்குனர் டத்தோ உஸ்வாத், தொழிலதிபர் ஜோசப் இங் ஆகியோரும் பொருளுதவிகள் வழங்கினர்.

தனித்து வாழும் தாயாரான திருமதி லெட்சுமிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளி மாநிலங்களில் வேலை செய்யும் நிலையில் தனது அன்றாட நடவடிக்கைகளை இருவர் கவனித்து வருவதாகவும் வீடு, வாகன கட்டணம், உணவு செலவீனம், மருத்துவச் செலவு உட்பட தனது அன்றாட நடவடிக்கைகளுக்கு மாதாந்திர செலவீனமாக வெ.5,000 தேவைப்படுவதாக திருமதி லெட்சுமி ராஜு தெரிவித்தார்.

Leave a Reply