நிறம் மாறும் கட்சிகளை நிராகரிப்பீர் ! – கேவியஸ்

Malaysia, News, Politics, Polls

 147 total views,  1 views today

இரா. தங்கமணி

ஈப்போ – 9/11/2022

தேர்தல் காலத்தில் மட்டும் பகைத்துக் கொண்டு ஆட்சி அமைக்க கைகோர்க்கும் ஆளும்கட்சி, எதிர்கட்சி தரப்பினரை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்று ஈப்போ பாராட் சுயேட்சை வேட்பாளர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் வேண்டுகோள் விடுத்தார்.

15ஆவது பொதுத் தேர்தலில் 100க்கும் அதிகமான சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

ஆட்சி அதிகாரத்திற்காக நிறம் மாறும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்பினரை காட்டிலும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்வாகி மக்களவைக்குச் சென்றால் மக்களின் குரல் பலமாக எதிரொலிக்கும்.

தேர்தலில் மட்டும் அடித்துக் கொண்டு ஆட்சி அமைப்பதற்காக கைகோர்க்கும் தரப்பினரால் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க முடியாது என்பதை உணர்ந்து சுயேட்ணை வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.

Leave a Reply