நிலையற்ற அரசியல்; பொருளாதாரத் துறைகள் பாதிப்பு

Malaysia, News

 182 total views,  2 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்,அக்.20-

நாட்டில் நிலவிய நிலையற்ற அரசியல்தன்மையினால் நாட்டின்  பொருளாதாரத் துறைகள் பெருமளவு பாதிப்பை எதிர்நோக்கின என்று மலேசிய இந்தியர் நகை வணிகர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல்  கூறினார்.

நாட்டை உலுக்கிய கோவிட்- 19 பெருந்தொற்றினால் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பல வணிக மையங்கள் மூடப்பட்டன. பல மாதமாக மூடப்பட்ட வணிக மையங்கள் வணிகம், வருமானம், தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டன.

ஐ-சேனலின் E-Paper-ஐ படிக்க கீழே உள்ள Link-ஐ அழுத்தம்..

பல ஆண்டுகளாக வர்த்தகம் மேற்கொண்டு வரும் நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல நினைத்தாலும் மாறி மாறி வந்த அரசாங்கத்தின் நிலையற்ற போக்கினால் எங்களின் பிரச்சினையும் மாற்றம் கண்டு வந்த ஒவ்வோர்  அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லும் நிலையை எதிர்கொண்டோம்.

நிலையான ஓர் அரசாங்கம் அமைவதே நாட்டின் பொருளாதாரத்திற்கும் வணிக நிறுவனங்களுக்கும் பாதுகாப்பான தளமாக அமைந்திடும் என்று ‘ஐ-சேனல்’ மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின்போது டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.

(டத்தோ ஹாஜி அப்துல் ரசூலுடனான சிறப்பு நேர்காணல் நாளை ‘ஐ-சேனல்’ மின்னியல் நாளிதழில் இடம்பெறும்.)

Leave a Reply