நிலையான, சுபிட்சமான ஆட்சிக்கு தேமுவே சிறந்த தேர்வு- மணிமாறன்

Malaysia, News, Politics

 244 total views,  1 views today

ஜோகூர்பாரு-

60 ஆண்டுகாலமாக நாட்டை நிர்வகித்த தேசிய முன்னணியால் மட்டுமே நிலையான, நீடித்த, சுபிட்சமான ஆட்சியை வழங்க முடியும் என்பதை உணர்ந்து நாளை நடைபெறும் ஜோகூர் மாநில வாக்காளர்கள் தேமுவை ஆதரிக்க வேண்டும் என்று சுங்கை சிப்புட் மஇகா தலைவர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை மக்கள் ஆளும் அரசாங்கமாக தேர்ந்தெடுத்தாலும் நிர்வாகத் திறமின்மை, கூட்டணி பூசல் போன்ற காரணங்களால் 22 மாதத்திலேயே ஆட்சியை இழக்கக்கூடிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால் தேசிய முன்னணி இந்நாட்டை சுதந்திர காலம் முதல் ஆட்சி செய்து வந்துள்ளது. சிறந்த நிர்வாகத் திறன் காரணமாகவே இன்னமும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது.

மக்கள் தேசிய முன்னணி மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதற்கு மலாக்கா இடைத்தேர்தலே ஓர் உதாரணமாகும். மலாக்காவில் பெற்ற வெற்றியின் காரணமாக அங்கு நிலையான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மலாக்கா மக்கள் கொண்ட நம்பிக்கையையே ஜோகூர் வாக்காளர்களும் தேசிய முன்னணி மீது கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது. நிலையான, சுபிட்சமான ஆட்சி அமைய தேமுவை ஆட்சியில் அமரவைக்க ஜோகூர் வாக்காளர்கள் முனைய வேண்டும் என்று மணிமாறன் வலியுறுத்தினார்.

Leave a Reply