நேட்டோவுடன் இணையும் கனவை கலைத்தது உக்ரைன்

News, World

 245 total views,  3 views today

கீவ்-

உக்ரைனின் நேட்டோ கனவு, ரஷியாவின் சோவியத் யூனியன் கனவுக்கு தடையாக அமைந்தது. இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் அதிரடியாக படைகளைக் குவித்த ரஷியா, உக்ரைனின் நேட்டோ கனவுக்கு எதிராக கடந்த மாதம் 24ஆம் தேதி போரைத் தொடங்கியது.

இந்த போர் நேற்று 14-ம் நாளை எட்டியது. இந்த 14 நாட்களில் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy, சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கும், ரஷியாவுடனான மோதலுக்கும் நேட்டோ அமைப்பு பயப்படுகிறது. உக்ரைனை ஏற்க நேட்டோ தயாராக இல்லை என்பதை புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் நான் அமைதியாகி விட்டேன். எதையும் காலில் விழுந்து பெறுகிற நாடாக உக்ரைன் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply