நேரடி பேச்சுவார்த்தையே போருக்கு தீர்வு- உக்ரைன் அதிபர்

News, World

 289 total views,  3 views today

கீவ்-

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இரு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலே முடிந்துள்ளது. சண்டை நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதால் சண்டையின் தீவிர தன்மை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷிய அதிபர் புதின் என்னுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும். அது ஒன்றே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி. 30 மீட்டர் இடைவேளியில் அல்ல. நான் கடித்துவிட மாட்டேன். நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply