நேரலை | காலை 10 மணி முதல் : பகி வாகனத்தில் வாக்காளர்களைக் கொண்டு வந்த தேசிய முன்னணி ஆதரவாளர்கள் – 15வது பொதுத் தேர்தல் வாக்களிப்பு நாள் !

Malaysia, News, Politics, Polls

 14 total views,  1 views today

– குமரன் –

19-11-2022

பகி வாகனத்தில் வாக்காளர்களைக் கொண்டு வந்த தேசிய முன்னணி ஆதரவாளர்கள்

காலை மணி 10.50 – ஷா ஆலாம், சிலாங்கூர் : வாகன நிறுத்துமிடம் கிடைக்காத வாக்காளர்களுக்கு தூரத்தில் இருந்து வாக்குச் சாவடிக்குக் கொண்டு வர பகி வகை வாகனத்தைப் பயன்படுத்தி உதவினர் தேசிய முன்னணி ஆதரவாளர்கள்.

தேசிய முன்னணி சின்னம் கொண்ட ஆடையை அவர்கள் அணிந்திருந்ததால் தேர்தல் ஆணையத்தின் எல்லை வரை மட்டுமே வர அனுமதிக்கப்பட்டனர்.

அதிக நேரம் காத்திருந்ததால் அதிருப்தி அடைந்த வயது முதிர்ந்த வாக்காளர்கள்

காலை மணி 10.45 – பண்டான், சிலாங்கூர் : இங்குள்ள் பண்டான் ஜெயா தேசியப் பள்ளியில் அதிக நேரம் காத்திருந்ததால் வயது முதிர்ந்த வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இராமு நாயுடு நருணன், 65 வயது இது குறித்து தெரிவிக்கவில், பூச்சோங்கில் இருந்து இங்கு வந்து வாக்குச் செலுத்துவதாக அவர் சொன்னார்.

மற்ற இடங்களில் மூத்த வாக்காளர்கள் இவ்வளவு காலம் தாமதிக்கவும் இல்லை காத்திருக்கவும் இல்லை எனக் கூறினார்.

காலை மணி 10.30 – பண்டான் ஜெயா, சிலாங்கூர் : இங்குள்ள பண்டான் ஜெயா தேசியப் பள்ளி வாக்குச் சாவடியில் காலை 7.00 மணி முதலே வாக்காளர்கள் காத்திருந்தனர்.

வாகனங்கள் அதிகமாக இருந்ததாலும் அங்கு நெரிசலாக இருந்தது.

தாமான் ஶ்ரீ கோம்பாக்கில் மழையிலும் வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

காலை மணி 10.30 – கோம்பாக், சிலாங்கூர் – தாமான் ஶ்ரீ கோம்பாக் தேசியப் பள்ளி வாக்குச் சாவடியில் 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் நின்றனர். மழையிலும் வாக்காளர்கள் தங்களின் கடமையைச் செய்யக் காத்திருந்தனர்.

லெம்பா பந்தாய் வாக்குச் சாவடியில் மின்சாரத் தடை

காலை மணி 10.05 – லெம்பா பந்தாய், கோலாலம்பூர் : இங்குள்ள சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் திறக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்குள் ஊடகாவியலாளர்களும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் செல்ல முடியாதச் சூழல் ஏற்பட்டது.

தேர்ட்ஜல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் நாங்கள். மற்ற வாக்குச் சாவடிக்குள் செல்ல முடிந்தது. ஆனால், இங்கு உல்ளே செல்ல அனுமதிக்கப்பட வில்லை என இங் செக் சான் தெரிவித்தார்.

இந்த மின்சாரத் தடையால் பலர் வாக்களிக்க முடியவில்லை. அந்தச் சவாடிக்கு விரைந்த TNB பணியாளர்கள் நிலைமையை சரி செய்தனர். காலை 9.30 மணிக்கு மின்சாரம் சீரானது. ஆனால், வாக்குச் சாவடி வாக்காளர்களால் நெரிசலானது.

இருளில் வாக்களிப்பு

காலை மணி 10.00 – கெப்போங் : இங்குள்ள கெப்போங் சீனப் பள்ளியில் ஒரு மணி நேரம் மின்சாரத் தடை ஏற்பட்டது. இருளில் வாக்களிக்கும் நிலை ஏற்பட்டதால் வயது முதிர்ந்த வாக்காளர்கள் அதிருப்தியில் இருந்தனர் என அங்கு போட்டியிடும் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் லிம் லிப் எங் குறிப்பிட்டார்.

நேற்று இரவிலிருந்து அங்கு மின் உற்பத்தி இயந்திரம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் இந்த மின்சாரட்த் த்டை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.

கோத்தா ராஜாவில் நல்ல வானிலை

காலை மணி 10.00 – கோத்தா ராஜா, சிலாங்கூர் : இங்கு மழை ஓய்ந்து வாக்காளர்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து வாக்குச் செலுத்த உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி முதன் முறையாக வாக்குச் சாவடியாக இயங்குகிறது.

Leave a Reply