நேரலை | முற்பகல் 11 மணி முதல் : மாற்றுத் திறனாளிக்கு வாக்களிப்பின்போது ஏற்பட்ட சவால் – 15வது பொதுத் தேர்தல் வாக்களிப்பு நாள் !

Malaysia, News, Politics, Polls

 16 total views,  1 views today

– குமரன் –

19-11-2022

வாக்களிப்பின்போது ஏற்பட்ட சவால்களைப் பகிர்ந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள்

முற்பகல் மணி 11.50 – பத்து, கோலாலம்பூர் : பார்வையை இழந்த மாற்றுத் திறனாளி சரஸ்வதி வேலய்யா, இங்குள்ள ஶ்ரீ டெலிமா தேசியப்பள்ளியில் வாக்கினைச் செலுத்த வந்தார்.

புடுவில் வசிக்கும் அவர் இந்த வாக்குச் சாவடிக்கு வாடகை வாகனத்தில் வந்ததாகக் குறிப்பிட்டார்.

வாகனத்தில் இருந்து இறங்கியவுடன் இப்பள்ளியின் நுழை வாயிலைத் தேடிக் கண்டு பிடிக்கச் சிரமப்பட்டதாகச் சொன்னார்.

நல்ல வேளையாகத் தமது அண்ணனின் உதவியால் வாக்களிக்கச் செல்ல முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

வாக்குச் சாவடிக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் காத்திருக்கத் தேவையில்லை எனவும் அதிகாரிகள் அவர்களை அழைத்துச் செல்வார்கள் எனவும் தேர்தல் ஆணைய அதிகாரி குறிப்பிட்டார்.

சுங்கை பூலோவில் புதிய தொடக்கத்தை எதிர்ப்பார்க்கும் கைரி ஜமாலுதீன்

முற்பகல் மணி 11.35 – ரெம்பாவ், நெகிரி செம்பிலான் : சுங்கை பூலோவில் களம் காணும் கைரி ஜமாலுதீன் ஒரு புதியத் தொடக்கத்தை எதிர்ப்பார்க்கிறார்.

ஹஜி முகம்மது யாஹ்தின் இடைநிலைப்பள்ளியில் தமது வாக்கைச் செலுத்திய பின்னர் டுவிட்டர் பக்கத்தில் கருத்திட்ட அவர், தமது மனநிலையைக் குறிப்பிட்டு அவ்வாறு பதிவிட்டிருந்தார்.

பாங்கியில் மூத்த வாக்காளர்களுக்கு உதவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்

முற்பகல் மணி 11.30, பாங்கி, சிலாங்கூர் : சக்கர நாற்காலியில் ஶ்ரீ கெராமாட் தேசியப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வந்த மூத்த வாக்காளுக்கு இங்கு பணியில் இருக்கும் தேர்தல் ஆணைய அதிகாரி உதவினார்.

அடையாள அட்டை நகல் கொண்டு வந்த பெண்மணி வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை

முற்பகல் மணி 11.25 – ஊத்தான் மெலிந்தாங், பாகான் டத்தோ : இங்குள்ள பூய் செங் சீனப்பள்ளி வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த பெண்மணி, அடையாள அட்டையின் நகலைக் கொண்டு வந்துள்ளார். காலை 10.30 மணி வந்த அவர் தமது அசல் அடையாள அட்டையை ஈப்போவில் இருக்கும் தமது வீட்டிலேயே வைத்து விட்டு வந்ததாக அவ்வாக்குச் சாவடி அதிகாரி அனிதா குறிப்பிட்டார்.

நகல் கொண்டு வந்தால் போதுமானது என 40 வயது தக்க்க அப்பெண்மணி நினைத்தார் என்று தம்மிடம் கூறியதை அனிதா குறிப்பிட்டார்.

.

வாக்குப் பதிவு விழுக்காடு அதிகரிக்கும் – அன்வார் நம்பிக்கை

முற்பகல் மணி 11.20 – மஞ்சோய், பேரா : ஒரு பக்கம் மழையாக இருந்தாலும்கூடம் இந்தத் தேர்தலில் வாக்களிப்போர் விழுக்காடு அதிகமாகப் பதிவு செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் அன்வார் இபுராகிம்.

பிற்பகல் 3.00 மணிக்குத் தலைநகர் செல்வதற்கு முன்னர் தாம்ம் போட்டியிடும் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் நில வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல உள்ளார் அவர்.

Leave a Reply