நேரலை | 15வது பொதுத் தேர்தல் நண்பகல் 12 மணி நிலவரம் – வாக்களிக்கச் செல்லும் இளம் வாக்காளர்கள்

Malaysia, News, Politics, Polls

 40 total views,  1 views today

குமரன் | 19-11-2022

வாக்களிக்கச் செல்லும் இளம் வாக்காளர்கள்

நண்பகல் மணி 12.30 – ஷா ஆலம், சிலாங்கூர் : கடந்த ஆண்டு திசம்பர் மாதம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான் ஶ்ரீ மூடாவைச் சேர்ந்த ஃபுட்சால் அண்யின் 8 உறுப்பினர்கள் முதல் முரையாக வாக்களிக்க வந்துள்ளனர்.

வாவாசன் பல்கலைக்கழகத்தில் பயிலும் 22 வயது விஷாலன் தபோனிதி குறிப்பிடுகயில், கடந்த ஆண்டு வெள்ளத்தில் சிக்கிய அனுஅவத்தை நினைவு கூர்வதாகச் சொன்னார்.

பத்துவில் ஆதரவு கேட்கும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்

நண்பகள் மணி 12.00 – ஶ்ரீ டெலிமா தேசியப் பள்ளி, பத்து : வாக்குச் சாவடிகளுக்கு வெளியே சுயேட்கை வேட்பாளர்களின் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்தக் கூடாரத்தைக் கடந்து செல்லும் வாக்காளர்களின் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எண் 7க்கு வாக்களிக்குமாறு கோரும் காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது.

அதே சமயம், நம்பிக்கைக் கூட்டணி ஆதரவாளர்கள் N95 வகை முகக்கவரியையும் வாரிசான் கட்சியின் ஊழியர்கள் பலகாரங்களையும் வாக்காளர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர்.


தேர்தல் சட்டப்படி, வாக்குச் சாவடிக்கு 50 மீட்டர் தூரம் வரையில் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply